பிரபல டாக்டர் மீது கற்பழிப்பு புகார்!
திருச்சி:
திருச்சியில் உள்ள பிரபல டாக்டர் மீது கொடுக்கப்பட்ட கற்பழிப்பு புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அரசு மருத்துவமனையில் சித்தா டாக்டராக இருப்பவர் ரமேஷ் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ). இவர் மணப்பாறையிலும் தனியாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.
இவரது மணப்பாறை கிளினிக்கில் அதே பகுதியை சேர்ந்த போதும்பொண்ணு என்ற பெண் இவருக்கு உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் மணப்பாறை காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், திருச்சி மாவட்டம் வையம்பட்டி அரசு மருத்துவமனையில் சித்தா டாக்டராகவும், மணப்பாறையிலும் தனியாக கிளினிக் வைத்து வைத்தியம் பார்த்து வரும் டாக்டர் ரமேஷ் கிளினிக்கில் அவருக்கு உதவியாளராக வேலை பார்த்து வருகிறேன்.
என்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கற்பழித்து விட்டார். தற்போது அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இது குறித்து அவரிடம் நான் கேட்டபோது அவர் என்னை திட்டி அடித்து உதைத்து சித்திரவதை செய்கிறார்.
எனவே டாக்டர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுத்துள்ளார். இம்மனு மீது விசாரணை நடத்திய திருச்சி எஸ்பி ராஜசேகர் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரம் இல்லை என அவர் மனுவை நிராகரித்து விட்டார்.
இதனால் போதும் பொண்ணு தனக்கு நியாம் வேண்டி தமிழக முதல்வர் வீட்டு முன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறியுள்ளார்.
சிறுவன் செய்த சிசேரியனுக்கு அடுத்த படியாக, மேலும் ஒரு டாக்டர் பிரச்சனை மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications