30 வருடங்களுக்கு பின் தேவர் ஜெயந்தியில் கருணாநிதி
கோவில்பட்டி:
பசும்பொன்னில் நடக்கவுள்ள தேவர் ஜெயந்தி விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி பங்கேற்கவுள்ளதாக அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாநில துணைப் பொதுச் செயலாளர் சேதுராமபாண்டியன் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில இளைஞரணி மாநாடு ராஜபாளையத்தில் வரும் 7ம் தேதி நடக்கிறது. மாநாட்டை முன்னிட்டு அன்று மாலை 5 மணிக்கு தேவர் 100வது ஜெயந்தி விழா நினைவு ஊர்வலம் நடக்கிறது.
இதையடுத்து ஜவகர் மைதானத்தில் நடக்கும் மாநாட்டில் மாநிலத் தலைவர் நடிகர் கார்த்திக், அகில இந்திய பொதுச்செயலாளர் பிஸ்வாஸ் எம்.பி மற்றும் மேற்குவங்க துணை சபாநாயகர் பக்திபாதகோஸ் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
அக்டோபர் 30ம் தேதி தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் 3 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்கிறார். மேலும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பாஜக மூத்தத் தலைவர் அத்வானி உட்பட பல தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.
30 ஆண்டுகளுக்கு பிறகு தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க பசும்பொன் வரும் முதல்வரிடம், மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்டவும், மதுரை அல்லது சென்னையில் தேவருக்கு மணிமண்டபம் கட்டவும் அவரிடம் பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் வலியுறுத்துவோம் என்றார் சேதுராம பாண்டியன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications