வருகிறது வட கிழக்கு பருவ மழை
சென்னை:
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை நாளை அல்லது நாளை மறுதினம் தொடங்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் மொத்த மழைப் பொழிவில் 48 சதவீதம் வட கிழக்குப் பருவ மழை மூலம்தான் கிடைக்கிறது. இந்தக் காலகட்டத்தில்தான் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவலாக மழை கிடைக்கும்.
ஆண்டுதோறும் அக்டோபர் இறுதியில் தொடங்கி டிசம்பர் மாதம் வரை வட கிழக்குப் பருவ மழை நீடிக்கும்.
வழக்காக அக்டோபர் 20ம் தேதி மழை தொடங்கும். இந்த ஆண்டு ஓரிரு நாட்கள் தாமதமாக நாளை அல்லது நாளை மறுநாள் பருவ மழை தொடங்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை பிராந்திய புயல் எச்சரிக்கை மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், வழக்கமாக அக்டோபர் 20ம் தேதி பருவ மழை தொடங்கும். இந்த ஆண்டு ஓரிரு நாள் தாமதமாக தொடங்குகிறது.
இருப்பினும் இந்த ஆண்டு அதிக மழை இருக்கும். பருவ மழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது என்றார் ரமணன்.
வட கிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கான அறிகுறியாக கடந்த 2 நாட்களாக சென்னை நகரில் மேகமூட்டமாக உள்ளது. இரவில் மழை பெய்கிறது. இன்று காலை முதல் சென்னையில் பரவலாக லேசான தூறல் மழை காணப்பட்டது. வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.
வழக்கமாக வட கிழக்குப் பருவ மழை மூலம் தமிழகத்திற்கு சராசரியாக 450 மில்லிமீட்டருக்கு மேல் மழை கிடைக்கும். இதில் கடந்த 10 ஆண்டுகளில் ஐந்து முறை மட்டுமே வழக்கமான மழை அல்லது கூடுதல் மழை பெய்துள்ளது. மற்ற ஆண்டுளில் பற்றாக்குறை மழைதான் பதிவாகியுள்ளது.
அதிக அளவாக கடந்த 2005ம் ஆண்டு இயல்பை விட (432 மில்லிமீட்டர்) கூடுதலாக அதாவது 773 மில்லிமீட்டர் மழை பெய்து தமிழகத்தையே உலுக்கியது நினைவிருக்கலாம்.
கடந்த ஆண்டு வழக்கமான மழைப் பொலிவை விட (432 மில்லிமீட்டர்) 15 சதவீதம் அதிகமான மழையே காணப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி பருவ மழை தொடங்கியது. இந்த ஆண்டு ஓரிரு நாட்கள் மழை தாமதமாக தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications