பர்னாலா பிறந்த நாள் பிரதமர், முதல்வர் வாழ்த்தினர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் 83வது பிறந்தநாளையொட்டி பிரதமர், தமிழக முதல்வர் உட்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆளுநர் பர்னாலா தனது 83வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்தார்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பர்னாலாவை நேரில் சந்தித்து முதல்வர் கருணாநிதி சார்பில் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களும், அதிகாரிகளும், ஆளுநரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications