வேகம் பிடிக்கும் சதாப்தி ரயில்கள்!
டெல்லி: சதாப்தி ரயில்களின் வேகத்தை படிப்படியாக அதிகரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் டெல்லி - ஆக்ரா இடையிலான போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் மணிக்கு 150 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி - கான்பூர் இடையிலான லக்னோ சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் அதிகரிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், வேகத்தை அதிகரிப்பதற்கான முன்னோட்டமாக, ரயில் பாதைகளை பலப்படுத்துவது, சிக்னல்களை சீரமைப்பது, பிற ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளோம்.
டெல்லி - கான்பூர் இடையிலான ரயில் பாதையில் சில இடங்கள் ரயிலின் வேகத்தைத் தாக்குப் பிடிக்குமா என்ற சந்தேகம் உள்ளதால் அங்கு பாதுகாப்பு கருதி ரயில் பாதையையொட்டி பலமான சுவர்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
டெல்லி - ஆக்ரா இடையே பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற பாதுகாப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது.
இதேபோல முக்கிய நகரங்களை இணைக்கும் பிற சதாப்தி மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தையும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களை இணைக்கும் ரயில்களின் வேகத்தை அதிகரித்த பின்னர் பிற ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்படும் என்றார் அவர்.
இந்தியாவில் புல்லட் ரயில்களை அறிமுகப்படுத்த வேண்டும் என பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் இந்த ரயிலை கொண்டு வர வேண்டுமானால், ஒரு பிரிவுக்கு ரயில் பாதை போட மற்றும் பிற பணிகளை மேற்ெகாள்ள ரூ. 40,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே புல்லட் ரயில் திட்டம் ரயில்வே துறையின் முன்னுரிமைத் திட்டப் பட்டியலில் இதுவரை இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications