கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு கலைஞர் டிவியின் புது ஆர்டர்!
திருநெல்வேலி: கலைஞர் டிவியின் நிகழ்ச்சிகள் குறித்த விளம்பரங்களை, இலவசமாக ஒளிபரப்பு வேண்டும் என தமிழகத்தில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ரகசிய உத்தரவு ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாம்.
திமுகவுக்கும், சன் டிவிக்கும் நல்லுறவு நிலவிய போது, திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்ளுக்கு தினகரன் நாளிதழின் சார்பில் சிடி ஒன்று அனுப்பப்பட்டது.
அதில் உள்ள தினகரன் நாளிதழ் குறித்த விளம்பரத்தை தினசரி இலவசமாக ஒளிபரப்ப வேண்டும் என சன் டிவி கூறியிருந்தது. தற்போது அவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அந்த விளம்பரம் காணாமல் போனது.
ஆனால் இப்போது கலைஞர் டிவியிலிருந்து ஒரு புது உத்தரவு வந்துள்ளதாம்.
அக்டோபர் 22ம் தேதியிட்ட, கலைஞர் தொலைக்காட்சியின் லோகோ இடம் பெற்றுள்ள லட்டர் பேடில், சேலத்திலிருந்து செயல்பட்டு வரும் Wel mediyas என்ற நிறுவனத்திற்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கலைஞர் டிவியின் Promos DVDயை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த டிவிடியை மேற்படி நிறுவனம் தமிழகத்தில் உள்ள கேபிள் டிவி ஒளிபரப்பாளர்களுக்கு கலைஞர் டிவி கடிதம் மற்றும் Wel mediyas கடிதத்துடன் இணைத்து அனுப்பி வைத்துள்ளது.
இதில் டிவிடியில், பிண்ணனி இசையுடன் கலைஞர் டிவியின் லோகோ முதலில் வருகிறது. அதன் பின் ரேகா ஐ.பி.எஸ், மஞ்சள் மகிமை, மானாட மயிலாட, தேன்மொழியாள், நம்ம குடும்பம் ஆகிய 5 நாடகங்களின் விளம்பரம், 1 நிமிடம் ஓடும் அளவுக்கு 3 கட்டமாக பதிவு செய்யப்பட்டு இடம் பெற்றுள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை இந்த டிவிடியை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
இந்த உத்தரவை நிறைவேற்றாவிட்டால் என்னென்ன பிரச்சினைகள் வருமோ என்ற பயத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications