மதுரை அதிமுக மா.செ-ராஜூ 'இன்', செல்லப்பா 'அவுட்'
Subscribe to Oneindia Tamil
சென்னை: மதுரை மாநகர மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த ராஜன் செல்லப்பாவை திடீரென நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக செல்லூர் ராஜூவை நியமித்துள்ளார் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
நேற்று தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரைக்கு வந்து சென்ற பின் ஜெயலலிதா இந்த மாற்றத்தைச் செய்துள்ளார்.
தற்போது அதிமுக செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் செல்லூர் ராஜூ ஏற்கனவே அதிமுக செயலாளராக இருந்தவர். அவரை நீக்கிவிட்டுத் தான் செல்லப்பாவை நியமித்தார். இப்போது மீண்டும் ராஜுவுக்கு பதவி தரப்பட்டுள்ளது.
சமீபத்தில் மதுரை மேற்கு தொகுதியில் நடந்த சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக நின்று தோல்வி அடைந்தவர் செல்லூர் ராஜூ என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications