நவ.4ம் தேதி ஸ்டாலின் நெல்லை வருகை
திருநெல்வேலி: உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 4ம் தேதி நெல்லை வருகிறார்.
திமுக இளைஞரணியின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது.
மாநாட்டு பணிகளை பார்வையிட தமிழக உள்ளாட்சி துறை அமைச்சரும், திமுக துணை பொது செயலாளரும் மற்றும் இளைஞரணி செயலாளருமான மு.க.ஸ்டாலின் வருகிற 4ம் தேதி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் முலம் நெல்லை வருகிறார்.
நெல்லை மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி.மற்றும் எம்.எல்.ஏக்கள்., மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஒன்றிய நகர செயலர்கள், மாநகர தி.மு.க. நிர்வாகிகள், மாவட்ட இளைஞர் அணியினர், தொழிற்சங்க பிரதிநிதிகள், வக்கீல் பிரிவினர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தி.மு.க.முன்னோடிகள் உள்பட அனைவரும் தவறாது கலந்து கொள்ள மாவட்ட திமுக அழைப்பு விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications