சிவந்தி ஆதித்தன்-சிவ்நாடார்-பாலசந்தருக்கு சென்னை பல்கலை. டாக்டர் பட்டம்
சென்னை: பத்திரிக்கை அதிபர் சிவந்தி ஆதித்தன், எச்சிஎல் நிறுவன அதிபர் சிவ்நாடார், இயக்குனர் பாலசந்தர் உள்பட 10 பேருக்கு சென்னை பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டங்களை வழங்கவுள்ளது.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.ராமச்சந்திரன் இதனைத் தெரிவித்தார்.
டாக்டர் பட்டம் பெறுவோர் விவரம்
பத்திரிக்கை அதிபர் தினத்தந்தி டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன். இவர் பத்திரிகை மற்றும் விளையாட்டுத்துறையின் மேம்பாட்டுக்காக செய்த சாதனைகளுக்காக இந்த டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
எச்.சி.எல். சாப்ட்வேர் நிறுவன அதிபர் சிவ்நாடார். இவர் மென்பொருள் தொழில்நுட்பத்துறையின் செய்த சாதனைக்காக இந்த பட்டம் தரப்படுகிறது.
பேராசிரியர் சி.ஆர்.ராவ். இவர் அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழக பேராசிரியர். புள்ளியியல் துறையில் இவர் செய்த சாதனைக்காக இந்த பட்டம் தரப்படுகிறது.
சாந்தலிங்க ராமசாமி அடிகளார். கோவை சாந்தலிங்கர் திருமடத்தின் தலைவராக உள்ள இவர் ஆன்மீகத் துறையில் புரிந்த சாதனைகளுக்காக இந்தப் பட்டம் வழங்கப்படுகிறது.
இவர்கள் தவிர, முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் சட்டத்துறையில் செய்த சாதனைகளுக்காகவும், நரம்பியல் நிபுணர் பேராசிரியர் சி.யூ.வேல் முருகன் மருத்துவத்துறையில் செய்த சேவைக்காகவும்,
உமையாள் ராமநாதன் கல்வித்துறையில் செய்த சேவைக்காகவும், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.சாந்தப்பா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் படைத்த சாதனைகளுக்காகவும்,
இயக்குனர் கே.பாலசந்தர் சினிமா, கலை மற்றும் கலாச்சாரத்துையல் செய்த சாதனைகளுக்காகவும், சர்வதேச திராவிட மொழிப் பள்ளியின் பேராசிரியர் வ.அய். சுப்பிரமணியம் இலக்கியத்துறைக்கு செய்த சேவையை பாராட்டியும் இந்த டாக்டர் பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
அன்று மாலையே டாக்டர் பட்டம் வழங்கும் விழா நடைபெறும். ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா தலைமை இந்த டாக்டர் பட்டங்களை வழங்குவார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications