செங்கோட்டையை அசத்தும் 'என்சைக்ளோபீடியா' சிறுமி!
செங்கோட்டை: 4 வயது சிறுமி பல தகவல்களை கேட்டவுடன் சொல்லி அசத்தி வருகிறார்.
திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை மின்சாரவாரியக் குடியிருப்பில் வசித்து வரும் சேக் ராஜா-ராபியத்துல் பசரீயா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள்.
மூத்த குழந்தையான மகபூப் நிஷா(4) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியொன்றில் யூ.கே.ஜி படித்து வருகிறாள்.
இந்தச் சிறுமியின் திறமையைக் கண்டு பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்கள் மட்டுமின்றி பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் விக்கித்து நிற்கிறார்கள்.
ஆசிரியர்களுக்கு கூட தெரியாத பல தகவல்களை கேட்டவுடன் சொல்லி விடுகிறாளாம் மகபூப் நிஷா.
இவர், உலகின் 195 நாடுகளின் பெயர்கள், இந்திய மாநிலங்களின் பெயர்கள், மற்றும் உலக நாடுகளின் தலைநகரங்கள், மாவட்டத் தலைநகரங்கள், தலைவர்களின் பெயர்கள், யூனியன் பிரதேசங்கள், 50 திருக்குறள், குரானில் சூராக்கள் பகுதி, உலகில் எந்த எந்த நாடுகள் எந்த ஆண்டுகளில் சுதந்திரம் பெற்றன, நாடுகளும் அதன் தேசிய சின்னங்களையும் அடி பிளறாமல் சுமார் 20 நிமிடம் அருவி நீராய் கொட்டி அசத்தும் இம்மாணவி 10க்கும் மேற்பட்ட கோப்பைகள், பதக்கங்களை பெற்றுள்ளார்.
இரண்டரை வயது முதல் தாய் ராபியத்துல் பசரீயா இவருக்கு பயற்சி அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இம்மாணவியை தூக்கத்தில் எழுப்பி எந்த கேள்வி கேட்டாலும் படக்கென்று பதில் செல்லி திணறடிக்கிறார்.
தென்காசி வட்டார பகுதிகளில் மட்டுமின்றி மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதி பள்ளிகளில் நடைபெறும் விழாக்களில் இம்மாணவி போய் கேள்விகளுக்கு பதில் அசத்தி வருகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications