காமன்வெல்த் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா
Subscribe to Oneindia Tamil

கம்பாலா: காமன்வெல்த் அமைப்பின் புதிய பொதுச் செயலாளராக இந்தியாவைச் சேர்ந்த கமலேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கான இந்தியத் தூதராக தற்போது கமலேஷ் சர்மா இருந்து வருகிறார். இந்த நிலையில் உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நடந்த காமன்வெல்த் அமைப்பின் மாநாட்டில் அவர் அமைப்பின் புதிய பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது இப்பொறுப்பில் இருக்கும் நியூசிலாந்து நாட்டு வெளியுறவு அமைச்சர் டான் மெக்கின்னன் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதன் பின்னர் கமலேஷ் அப்பொறுப்புக்கு வருவார்.












Click it and Unblock the Notifications