சாலை விபத்துகள்: இந்தியாவில் தமிழகம் முதலிடம்- டெல்லியை 'தொடும்' சென்னை

இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகள் குறித்த தகவல்களை தேசிய குற்ற ஆவணங்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது. 2006ம் ஆண்டுக்கான சாலை விபத்துகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில் 2005ம் ஆண்டுக்கான விவரங்கள் முழு அளவில் வெளியிடப்பட்டுள்ளன.
அதன் விவரம்
இந்தியாவில் சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2001ம் ஆண்டு 80,262. இது 2005ம் ஆண்டில் 98,254 ஆக உயர்ந்துவிட்டது.
சாலை விபத்தால் தினந்தோறும் 280 பேர் இறக்கின்றனர். 2005ம் ஆண்டு சாலை விபத்துகளில் இறந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 15 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள். நான்கில் ஒரு பகுதியினர் சாலைகளில் நடந்து சென்றவர்கள்.
டிரக், லாரிகள் போன்ற கனரக வாகனங்களுக்கு இணையாக, கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களால் ஏற்படும் விபத்துகளும் அதிகமாகிவிட்டன.
மாநிலங்கள் வாரியாக சாலை விபத்துகளில் முதலிடத்தில் இருப்பது தமிழகம் தான்.
கடந்த 2005ம் ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 13,961 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக ஆந்திராவில் 10,944 பேர் இறந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பகுதியினர் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களை சேர்ந்தவர்கள்.
பெரு நகரங்களில் வரிசையில் டெல்லி தான் விபத்துக்களில் முதலிடம் உள்ளது. அடுத்த இடத்தில் சென்னை உள்ளது.
2005ம் ஆண்டில் டெல்லியில் 1,717 பேரும் சென்னையில் 1,055 பேரும் இறந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் 2006ம் ஆண்டில் சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும் எனத் தெரிகிறது.
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 12 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறக்கின்றனர் என ஐ.நா புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் உலகில் ஓராண்டில் சாலை விபத்துக்களால் இறப்பவர்களில் 10 முதல் 12 சதவீதம் பேர் இந்தியாவில் தான் இறக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications