ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தல்: புதின் கட்சி வெற்றி
மாஸ்கோ: ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் விலாடிமிர் புதினின் ஐக்கிய ரஷ்ய கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது.
ரஷ்ய நாடாளுமன்றத்திற்குப் (டூமா) பொதுத் தேர்தல் நடந்தது. இதில் புதின் கட்சியே மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்று ஏற்கனவே கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று தொடங்கியது.
இதில் புதினின் ஐக்கிய ரஷ்ய கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. நேற்று இரவு வரை எண்ணப்பட்ட 40 சதவீத வாக்குகளில் 63.6 சதவீத வாக்குகளை புதின் கட்சி பெற்றுள்ளது.
இதுகுறித்து ரஷ்ய தலைமைத் தேர்தல் ஆணையர் விலாடிமிர் சுரோவ் கூறுகையில், ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி கம்யூனிஸ்ட் கட்சிக்கு 11.3 சதவீத வாக்குகளும், லிபரல் ஜனநாயகக் கட்சிக்கு 9.6 சதவீத வாக்குகளும், ஜஸ்ட் ரஷ்யா கட்சிக்கு 7.2 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.
நாடாளுமன்றத்திற்குள் நுழையத் தேவையான குறைந்தபட்ச வாக்குகளான 7 சதவீதத்தை மற்ற கட்சிகள் எதுவும் தொடவில்லை.
தேர்தலில் மொத்தம் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 2003ல் நடந்த தேர்தலின்போது 55.75 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன என்றார் சுரோவ்.
தேர்தல் வெற்றி குறித்து ஐக்கிய ரஷ்ய கட்சித் தலைவரும், நாடாளுமன்ற சபாநாயகருமான போரிஸ் கிரைஸ்லோவ் கூறுகையில், இது புதினுக்குக் கிடைத்த வெற்றி. எங்களுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய பெரும்பான்மை பலத்தை வைத்து அரசியல் சட்டத்தை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம் என்றார்.
கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜென்னடி யுகனோவ் கூறுகையில், தேர்தலில் நிறைய குளறுபடிகள், மோசடிகள் நடந்துள்ளன. இதை எதிர்த்து வழக்குப் போடுவோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications