சோனியா காந்தி பிறந்த நாள்: கருணாநிதி வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

Sonia Gandhi
சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 61வது பிறந்தநாளையொட்டி அவருக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

சோனியா காந்திக்கு இன்று 61வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி முதல்வர் கருணாநிதி இன்று விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டின் மதச்சார்பற்ற தன்மையைக் காக்க தாங்கள் ஆற்றி வரும் பணி சிறப்பானது. இந்திய ஜனநாயகத்திற்கே சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறீர்கள்.

உங்களது தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பல்வேறு சாதனைகளைச் செய்து வருகிறது. நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறது.

நல்ல ஆயுளுடன், நீண்டு நெடுங்காலம் வாழ வாழ்த்துகிறேன் என்று தனது வாழ்த்துச் செய்தியில் கருணாநிதி தெரிவித்திருந்தார்.

காங்கிரஸார் கொண்டாட்டம்:

சோனியாவின் பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் இன்று காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

மாநிலத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சோனியா காந்தி பெயருக்கு சிறப்பு அர்ச்சனைகள், பூஜைகள் செய்யப்பட்ன.

திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில், இன்று பிறந்த ஐந்து பெண் குழந்தைகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் இனியன் சம்பத், நகர் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் ஆகியோர் தங்க மோதிரங்களை அணிவித்தனர்.

மேலும் மருத்துவமனைக்கு வந்த அனைவருக்கும் இனிப்புகளும் வழங்கப்பட்டன.

இதேபோல மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் அன்னதானம், இலவச வேட்டி, சேலை வழங்குவது, ரத்ததானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+