திமுக ஆட்சியில் இல்லை என்றால் அது உண்டு-பாஜக

அவர் கூறுகையில்,
திமுக ஆட்சியில் எதை இல்லை என்று சொல்கிறார்களோ அது நிச்சயம் உண்டு என்று அர்த்தம். கடந்த வாரம் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் இல்லை என்றார் போலீஸ் டிஜிபி.
அறிவித்த 4 நாட்களில் 2 விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளியில் இருந்து தமிழ்நாட்டுக்குள் ஊடுருவிய போதே கைது செய்திருந்தால் உண்மையிலேயே விடுதலைப் புலிகள் நடமாட்டம் இல்லை என்று நம்பியிருக்கலாம். ஆனால் உள்ளே இருந்து வெளியே செல்லும்போது கைது செய்துள்ளனர்.
மின் வெட்டே இல்லை என்று முதலில் மறுத்தார்கள். இப்போது அதை ஏற்றுக் கொண்டார்கள்.
தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இருப்பதை ஒத்துக் கொண்டு அவர்களை அடக்குவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு எங்கே தங்கள் மீது நடவடிக்கை எடுத்து விடுமோ என்ற முன் அனுபவத்தின் அடிப்படையில் கண்துடைப்புக்காக அறிக்கை விடுவது, ஆணையிடுவதோடு நிற்காமல் உண்மையாகவே தமிழகம் பயங்கரவாதிகள், வன்முறையாளர்கள் பிடியில் இருந்து விடுபட கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஊக்கம் அளிப்பவர்கள், ஆதரவாக செயல்படும் அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications