For Daily Alerts
Just In
டெல்லியில் உச்சக்கட்ட உஷார் நிலை!

டெல்லி போலீஸாருக்கு இன்று காலை உளவுப் பிரிவு முக்கிய தகவலைத் தெரிவித்தது. டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என உளவுப் பிரிவு, காவல்துறையை எச்சரித்தது.
இதையடுத்து டெல்லி முழுவதும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மாநகரம் முழுவதும் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்கள், பொது முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், கட்டடங்கள், அரசு அலுவலக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தீவிர வாகன சோதனைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.