For Quick Alerts
For Daily Alerts
Just In
மினி காரை அறிமுகப்படுத்தும் பிஎம்டபிள்யூ
சென்னை: உலகின் மிகப் பெரும் கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பிஎம்டபிள்யூ மினி காரை அறிமுகப்படுத்தவுள்ளது. விரைவில் இந்த கார் இந்திய சாலைகளை அலங்கரிக்கவுள்ளது.
சென்னையில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிரமாண்டமான புதிய ஷோரூம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதைத் திறந்து வைத்த இதன் தலைவர் பீட்டர் குரோன்ச்னபி பேசுகையில், பிஎம்டபிள்யூவின் மினி கார் ரூ. 20 லட்சம் விலை கொண்டதாக இருக்கும்.
விரைவில் இந்தியாவில் இந்தக் காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பாக ஏற்கனவே சந்தை ஆய்வுகளை முடித்து விட்டோம். தற்போது காரை சந்தைக்குக் கொண்டு வருவதற்கான விவாதங்ள் நடந்து வருகின்றன.
2009ம் ஆண்டு வாக்கில் பிஎம்டபிள்யூவின் எஸ்6 ரக கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.
இந்தியாவில் இப்போதைக்கு சிஎன்ஜி கார்களை அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என்றார் பீட்டர்.