For Daily Alerts
Just In
சுனாமி: தமிழகத்திற்கு ராஜஸ்தான் ரூ. 20 கோடி நிதி
ஜெய்பூர்: தமிழகத்துக்கு சுனாமி நிவாரண நிதியாக ரூ 20.05 கோடி வழங்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் சட்டசபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ராஜஸ்தான் சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் ஹரிமோகன் சர்மாவின் கேட்ட கேள்விக்கு அம்மாநில இயற்கைச் சீற்ற மேலாண்மைத் துறை அமைச்சர் லஷ்மி நாராயண் தவே அளித்த பதிலில் இத்தகவலைத் தெரிவித்தார்.
தவே கூறுகையில், தமிழக சுனாமி நிவாரண நிதிக்காக, முதலமைச்சர் நிவாரண நிதி மூலம், ரூ.20.05 கோடி திரட்டப்பட்டது.
அதில் ரூ.17.42 கோடி நிதி, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தமிழக அரசின் பரிந்துரையின்படி செலவிடப்பட்டுள்ளது.
மீதமுள்ள 2 கோடியே 62 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் நிதி செலவிடப்படாமல் முதல்வர் நிவாரண நிதியிலேயே உள்ளது என்றார்.