For Daily Alerts
Just In
துபாயில் இந்திய பல்கலையின் புதிய பாடத் திட்டம்
துபாய்: துபாயில் செயல்பட்டு வரும் இந்தியப் பல்கலைக்கழகமான மணிப்பால் பல்கலைக்கழகம் புதிய பொறியியல் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு மனித வளம் தொடர்பான பாடங்கள் புதிய கல்வியாண்டு முதல் தொடங்கப்படவுள்ளன.
இது தவிர மேலும் தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் கட்டிடக் கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் இந்த பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்துகிறது.
துபாய் அறிவு கிராம செயல் இயக்குநர் டாக்டர் அயூப் காஜிம், மணிப்பால் பல்கலைக்கழக இயக்குநர் டாக்டர் ராம்ஜி ஆகியோர் இதனை தெரிவித்தனர்.