For Daily Alerts
Just In
தா.கி-அதிமுக, மதிமுக வெளிநடப்பு

தமிழக சட்டசபை இன்று காலை கூடியதும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. கேள்வி நேரம் முடிந்ததும், அதிமுக கொறடா கே.ஏ.செங்கோட்டையன் எழுந்து, தா.கிருட்டிணன் கொலை வழக்கு குறித்துப் பேச அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் கோரினார்.
ஆனால் அதுகுறித்து உறுப்பினர் கொடுத்துள்ள கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாகவும், இப்போது அதை அனுமதிக்க முடியாது என்றும் சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்தார்.
இதையடுத்து பேச தங்களுக்கு அனுமதி அளிக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக செங்கோட்டையன் தெரிவித்து விட்டு வெளியேறினார். அவருடன் அதிமுக உறுப்பினர்களும் வெளியேறினர்.
இதையடுத்து அதிமுகவினருக்கு ஆதரவு தெரிவித்து மதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.