இட ஒதுக்கீடு-தீர்ப்பை எதிர்க்கும் 'எய்ம்ஸ்' டாக்டர்கள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதாக டெல்லி, அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக மருத்துவனை டாக்டர்கள் கூறியுள்ளார்.
இட ஒதுக்கீட்டு சட்டத்தை எதிர்த்து கடுமையாக போராடியவர்கள் எய்ம்ஸ் டாக்டர்கள். இந்த நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதாக எய்ம்ஸ் டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத் தலைவர் குமார் ஹர்ஷ் கூறுகையில், இந்தத் தீர்ப்பு வருங்கால சந்ததியினருக்கு பெரும் கெடுதலை ஏற்படுத்தும். கல்வி பலவீனப்படும்.
இந்த தீர்ப்பு, ஜாதி, மத ரீதியில், கல்வியைப் பிரிப்பதாகவும். எனவே இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications