For Daily Alerts
Just In
வெளிநாட்டினருக்கு செளதி இளவரசர் உதவி
ரியாத்: செளதி அரேபியாவில் பணியாற்றி வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான உதவிகளை செய்ய இளவசர் அல் வாலித் பின் தலால் ஒத்துக் கொண்டுள்ளார்.
செளதி அரேபியாவில் பணியாற்றி வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு தேவைப்படும் மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி, சிகிச்சை உதவி உள்ளிட்டவற்றை இளவரசர் வாலித் வழங்குவார்.
தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினருக்கும் இந்த மருத்துவ உதவி வழங்கப்படும்.
இது தொடர்பான அமைப்பு, சிகிச்சைக்கான தேவை உள்ளிட்டவை குறித்துப் பரிசீலித்து, இளவரசருக்குப் பரிந்துரைக்கும். அதன் பேரில் உதவிகள் கிடைக்கும்.
இதுதொடர்பான விவரங்களுக்கு ஹமாத் அல் அசிம்,டபிள்யூ.ஏ.எம்.ஒய். தலைமை அலுவலகம், கிங் பாத் சாலை, ஓவைஸ் மார்க்கெட் எதிரில், ரியாத்.
தொலைபேசி எண்- 2050000