For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்பாசிடர் வேண்டாம்.. ஸ்கார்பியோ-டாடா சபாரி வேணும்: ஜெ

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: எனக்கு குண்டு துளைக்காத பழைய அம்பாசிடர் கார் கொடுத்துள்ளனர். அந்த காருக்கு பதிலாக குண்டு துளைக்காத டாடா சபாரி அல்லது ஸ்கார்பியோ கார் வழங்கப்பட வேண்டும்.

சந்திரபாபு நாயுடுவுக்கு தரப்பட்டுள்ளது போல எனக்கும் கமாண்டோ படை பாதுகாப்பாக தர வேண்டும்.

வெடி குண்டுகளை கண்டுபிடிக்க மோப்ப நாய் வசதி செய்து தர வேண்டும். என் வீட்டுக்கு வரும் கடிதங்களில் குண்டு உள்ளதா என்பதை சோதிக்க கருவிகள் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா இன்று புதிதாக ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக அரசியல் தலைவர்களில் என் உயிருக்குத் தான் விடுதலைப் புலிகளால் அதிக அச்சுறுத்தல் உள்ளது. எந்த நேரத்திலும் விடுதலைப் புலிகளால் எனக்கு ஆபத்து நேரிடலாம். இதை கருத்தில் கொண்டு 2001ல் எனக்கு இசட்' பிரிவு பாதுகாப்பு தரப்பட்டது.

2006ம் ஆண்டுக்குப் பிறகு எனக்கு பாதுகாப்பை குறைத்து விட்டனர். எனக்கு மிரட்டல் அதிகமாக உள்ளது. சமீப காலமாக எனக்கு உரிய பாதுகாப்பு இல்லை.

என் வீட்டை சுற்றி மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என் வீடு அருகில் கைதாவதாக அடிக்கடி நடந்து வருகிறது. எனவே எனக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.

எனக்கு குண்டு துளைக்காத பழைய அம்பாசிடர் கார் கொடுத்துள்ளனர். அந்த காருக்கு பதில் குண்டு துளைக்காத டாடா சபாரி அல்லது ஸ்கார்பியோ கார் வழங்கப்பட வேண்டும். அந்த காரில் வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்யும் ஜாமர் கருவிகளைப் பொருத்த வேண்டும்.

என் பாதுகாப்புக்கு வரும் போலீசாருக்கு வாக்கி-டாக்கி உள்ளிட்ட நவீன கருவிகளை கொடுக்க வேண்டும். அதோடு போலீசார் தூரத்திலேயே கண்காணிக்க ஸ்பீடு காமிரா வழங்கப்பட வேண்டும்.

ஆந்திரா எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு வீட்டை சுற்றி 150 போலீசாரும் கமாண்டோ படை வீரர்களும் நிறுத்தப்பட்டுள்ளன். அத்தகைய பாதுகாப்பை எனக்கும் அளிக்க வேண்டும். மேலும் ஆயுதப்படையில் நன்கு பயிற்சி பெற்ற கமாண்டோ வீரர்களை என் பாதுகாப்புக்கு நியமிக்க வேண்டும்.

பொதுக் கூட்டங்களுக்கு நான் செல்லும் போது முன்னதாகவே பொதுக் கூட்ட மேடைக்கு சென்று ஆய்வு செய்யும் போலீசார் வேண்டும். மேலும் வெடி குண்டுகளை கண்டுபிடிக்க மோப்ப நாய் வசதி செய்து தரப்பட வேண்டும்.

எனக்கு வரும் கடிதங்களில் வெடிகுண்டு உள்ளதா என்பதை கண்டுபிடிக்க நவீன கருவி தர வேண்டும்.

நான் வெளி இடங்களுக்கு செல்லும்போது என் வாகனங்களுடன் வர ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று தர வேண்டும். அந்த ஆம்புலன்சில் ஸ்ட்ரெச்சர், ஆக்ஜிசன் சிலிண்டர் மற்றும் மருந்து வசதிகள் இருக்க வேண்டும். மேலும் அந்த ஆம்புலன்சில் என் ரத்த வகையை சேர்ந்த ரத்தம் இருப்பு வைத்திருக்க வேண்டும்.

கொடநாடு எஸ்டேட்டில் நான் தங்கி உள்ளேன். அங்கு சரியான முறையில் மின் வசதி இல்லை. எனவே உடனே மின் இணைப்பு தர வேண்டும்.

நான் தங்கி இருக்கும் இடத்தை சுற்றி ஒளி வெள்ளம் தரக்கூடிய போக்கஸ் விளக்குகளை பொருத்த வேண்டும். அதற்கான மின் இணைப்பை மாநில அரசே கொடுக்க வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா அந்த மனுவில் கூறியுள்ளார்.

சட்டம்-ஒழுங்கு கெட்டு போச்சு:

இதற்கிடையே ஜெயலிதா விடுத்துள்ள அறிக்கையில்,

கொடைக்கானலில் ஒரு நக்ஸலைட் போலீஸ் எண்கெளன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதன் மூலமும் 10 நக்ஸல்கள் தப்பியோடிவிட்டதன் மூலமும் தமிழகம் தீவிரவாதிகளின் புகலிடம் ஆகிவிட்டது உறுதியாகிவிட்டது.

திமுக அரசின் அணுகுமுறையால் இங்கு சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது.

நான் இந்தத் தவறை சுட்டிக் காட்டும்போதெல்லாம் முதல்வர் கருணாநிதி தேவையில்லாத புள்ளிவிவரங்களை எல்லாம் எடுத்துச் சொல்லி எல்லாம் சரியாக இருப்பதாக காட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அண்டை மாநிலங்கள் கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதால் நக்ஸல்கள் தமிழகத்தக்குள் ஊடுருவிக் கொண்டுள்ளனர்.

இந்த போலீஸ் எண்கெளன்டர்களால் மக்களிடையே அச்சம் பரவியுள்ளது. இதனால் கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்து சுற்றுலா பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X