
கர்நாடக தேர்தல்: 15 அதிமுக மாஜி அமைச்சர்கள் பிரசாரம்!
சென்னை: கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய 15 முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய குழுவை கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் அதிமுக 7 இடங்களில் தனித்துப் போட்டியிடுகிறது.
இந்த நிலையில் தேர்தல் பணிகளைப் பார்வையிடவும், பிரசாரம் மேற்கொள்ளவும் 15 முன்னாள் அமைச்சர்கள் கொண்ட குழுவை ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இந்தக் குழுவில் வி.சோமசுந்தரம், பி.சி.ராமசாமி, ஏ.மில்லர், பாண்டுரங்கன், தனபால், அன்வர் ராஜா, ராமசந்சிதரன், சத்தியமூர்த்தி, வடிவேல், மோகன், வரகூர் அருணாச்சலம், வளர்மதி ஜெபராஜ், அன்பழகன், நத்தம் விஸ்வநாதன் ஆகிய முன்னாள் அமைச்சர்களும், சுலோச்சனா சம்பத் மற்றும் பி.எம்.நரசிம்மன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் தேர்தல் பணிகளைப் பார்த்துக் கொள்வதோடு பிரசாரத்திலும் ஈடுபடுவார்கள்.