அரசு மருத்துவமனை லிப்ட்டில் சிக்கிய 10 பேர் மீட்பு
சென்னை: சென்னை அரசு பொது மருத்துவமனை லிப்ட்டுக்குள் 3 பெண்கள் உள்பட 10 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களை சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்புப் படையினர் மீட்டனர்.
சென்னை அரசு பொது மருத்துவமனையில் இரு பகுதிகளாக 7 மாடிகளைக் கொண்ட கட்டடம் உள்ளது.
இதில் முதல் டவரில் உள்ள லிப்ட்டை நோயாளிகளும், நோயாளிகளைக் காண வருவோரும் பயன்படுத்தி வருகின்றனர். நேற்று மாலை 6 மணியளவில் 7வது மாடியிலிருந்து லிப்ட் பத்து பேருடன் கீழே வந்து கொண்டிருந்தது. அப்போது முதல் தளத்திற்கும், தரைத் தளத்திற்கும் இடையே வந்த போது திடீரென லிப்ட் நின்று விட்டது.
லிப்ட்டில் கோளாறு ஏற்பட்டதால் அது நின்றது. இதனால் லிப்ட்டுக்குள் இருந்த 10 பேரும் பீதியடைந்து அலறினர். அவர்களில் 5 பேர் பெண்கள் ஆவர். அவர்களில் அரசு செய்தித் தொடர்பாளர் ஜெயஸ்ரீயும் ஒருவர்.
இந்த நிலையில் லிப்ட் நின்ற தகவல் அறிந்ததும் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்தனர். இந்த நிலையில் லிப்ட்டுக்குள் இருந்த சிவகாமி என்ற பெண் வியர்த்துப் போய் மயக்கமடைந்து விட்டார். மேலும் 2 பெண்களும் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு ஜெயஸ்ரீ தன்னிடமிருந்து தண்ணீரைக் கொடுத்து மயக்கம் தெளிவித்து ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில், இரவு 8 மணி வாக்கில் தீயணைப்புப் படையினர் மிகுந்த சிரமப்பட்டு லிப்ட்டை தரைத் தளத்திற்குக் கொண்டு வந்தனர். பத்து பேரும் வியர்த்துப் போய் தொப்பலாக வெளியே வந்தனர்.
அனைவருக்கும் உடனயாக குளிர்ந்த நீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். அதன் பிறகு பத்து பேரும் வெளியேறினர்.
அதிக அளவில் பாரம் இருந்ததால்தான் லிப்ட் நின்று விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு












Click it and Unblock the Notifications