கற்பழிப்பு-பழங்குடியின பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை
தேனி: தேனி அருகே பழங்குடியின பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் கற்பழித்துள்ளது.
தேனி மாவட்டத்தை சேர்ந்த அருங்குளம் பகுதியை சேர்ந்தவர் சங்கு. இவரது மகள் நாகம்மாள் (18). இவருக்கும் ராஜூ என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
ஆனால், ராஜூ நாகம்மாளை கைவிட்டு விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் நாகம்மாள் தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
வீட்டில் தனியே இருந்த நாகம்மாளை ரவி, பாண்டி, முருகன், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என 4 பேர் சேர்ந்து கற்பழித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து நாகம்மாளின் தந்தை கிராம பஞ்சாயத்தில் புகார் தெரிவித்துள்ளார். மேலும், தேனி மாவட்ட எஸ்.பி. சுதாகரிடமும் புகார் தெரிவித்தார்.
இது குறித்து விசாரணை நடத்த எஸ்பி உத்தரவிட்டார். அதன் பேரில் குரங்கனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில், நாகம்மாள் கற்பழித்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து முரண்பட்ட தகவல் வெளியானதால் நாகம்மாளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.