இன்று யூரோ 2008 இறுதிப் போட்டி: கோப்பை யாருக்கு?
ஐரோப்பிய கோப்பை 2008 கால்பந்து தொடரில் இன்று இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. வலுவான ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் நாடுகள் மோதுவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
வியன்னாவில் உள்ள எர்னஸ்ட் ஹேப்பல் மைதானத்தில் போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்குகிறது.
இதுவரை 3 முறை கோப்பையை வென்றுள்ள, 5 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஜெர்மனியும், ஒரே ஒரு முறை மட்டுமே ஐரோப்பிய கோப்பையை வென்றுள்ள ஸ்பெயினும் மோதுவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெர்மனி மூன்று முறை உலகக் கோப்பையையும் வென்ற அணியாகும். எனவே இன்றைய இறுதிப் போட்டியிலும் ஜெர்மனியின் கையே ஓங்கியிருக்கும் என்பது ஜெர்மனி ரசிகர்களின் கருத்தாகும்.
அதேசமயம், இதுவரை இல்லாத அளவுக்கு முழுத் திறமையையும் காட்டி ராசியில்லாத அணி என்ற பெயரை ஸ்பெயின் மாற்றும் என்ற நம்பிக்கையில், ஸ்பெயின் ரசிகர்கள் உள்ளனர்.
ஜெர்மனி அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக பாஸ்டியன் ஸ்வென்ஸ்டீகர், லூகாஸ் போடோல்ஸ்கி, ஜென் லெஹ்மான், மிரஸ்லோவ் குளோஸ், கேப்டன் பாலக் ஆகியோர் உள்ளனர்.
ஸ்பெயினின் துருப்புச் சீட்டுக்களாக செஸ்க் பேப்ரிகஸ், ஆண்ட்ரஸ் இனியஸ்டா, பெர்னாடோ டோரஸ், ஸேவி ஹெர்னண்டஸ் ஆகியோர் உள்ளனர்.
இரு அணிகளும் இறுதிக்கு வந்த விதம்:
ஜெர்மனி
லீக் போட்டிகளில் ..
போலந்துடன் - 2-0 - வெற்றி
குரோஷியாவுடன் - 1-2 - தோல்வி
ஆஸ்திரியாவுடன் - 1-0 - வெற்றி
காலிறுதிப் போட்டியில் ..
போர்ச்சுகலுடன் - 3-2 - வெற்றி
அரை இறுதிப் போட்டியில் ..
துருக்கியுடன் - 3-2- வெற்றி
ஸ்பெயின்
லீக் போட்டிகளில் ..
ரஷ்யாவுடன் - 4-1- வெற்றி
ஸ்வீடனுடன் - 2-1 வெற்றி
கிரீஸுடன் - 2-1 - வெற்றி
காலிறுதிப் போட்டியில் ..
இத்தாலியுடன் - 4-2 - வெற்றி
அரை இறுதிப் போட்டியில் ..
ரஷ்யாவுடன் - 3-0 - வெற்றி
யூரோ 2008 - ஒரு பார்வை
- அதிக கோல்கள் போட்ட அணி - ஸ்பெயின் (11)
- அதி வேக கோல் போட்ட வீரர்
லூகாஸ் மாட்ரிக் - 4வது நிமிடத்தில்.
- அதிக கோல்கள் போட்ட வீரர்கள்
டேவிட் வில்லா - ஸ்பெயின் - 4
லூகாஸ் போடோல்ஸ்கி - ஜெர்மனி - 3
ஹேகன் யாகின் - துருக்கி - 3
செமி சென்டர்க் - துருக்கி - 3
ரோமன் பேவ்லிசென்கோ - ரஷ்யா - 3
- முந்தைய சாம்பியன்கள்
1960 - சோவியத் யூனியன்
1964 - ஸ்பெயின்
1968 - இத்தாலி
1972 - மேற்கு ஜெர்மனி
1976 - செக்கோஸ்லேவகியா
1980 - மேற்கு ஜெர்மனி
1984 - பிரான்ஸ்
1988 - நெதர்லாந்து
1992 - டென்மார்க்
1996 - ஜெர்மனி
2000 - பிரான்ஸ்
2004 - கிரீஸ்
--