திமுக அணிக்கு பாமக திரும்பி வரும்: ப.சிதம்பரம்
சென்னை: திமுக அணியிலிருந்து பாமக விலகியிருப்பது போல ஒரு காட்சி இருக்கிறது. நாளைக்கே பாமக திமுக அணிக்கு மீண்டும் திரும்பி வரக் கூடாது என யாரும் சொல்ல முடியாது. வரும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதியை, ப.சிதம்பரம் இன்று கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலும் பாமக பங்கேற்றுள்ளது.
தமிழகத்தில் இடையிலே சில வேறுபாடுகள் தோன்றியதன் காரணமாக விலகியிருப்பது போல ஒரு காட்சி இருக்கிறது. நாளைக்கே மீண்டும் பாமக தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. தெரிவிக்கலாம்.
காங்கிரஸ் ஆட்சியை மூழ்கும் கப்பல் என்று இடதுசாரிகள் விமர்சித்துள்ளனர். நாடு எப்போதெல்லாம் சங்கடத்தில் மூழ்குகிறதோ அப்போதெல்லாம் நாட்டைக் காப்பாற்றும் மாலுமியாகத்தான் காங்கிரஸ் இருந்து வந்திருக்கிறது. எனவே இந்த விமர்சனம் சிறுபிள்ளைத்தனமானது என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications