அமெரிக்க குடியரசுக் கட்சி: துணை அதிபர் வேட்பாளர் பாபி ஜிண்டால்?

ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக தேர்வாகியுள்ள பாரக் ஓபாமா, தனது கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக ஜோசப் பிடனை அறிவித்துள்ளார்.
இதையடுத்து குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் பதவிக்கு லூசியானா மாகாண ஆளுநர் பாபி ஜிண்டால் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குடியரசுக் கட்சியின் அதிபர் பதவி வேட்பாளராக ஏற்கனவே ஜான் மெக்கெய்ன் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 1ம் தேதி முதல் மின்னசோட்டாவின் செயின்ட் பால் நகரில் நடைபெறவுள்ள குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில், இடம் பெற்றுள்ள முக்கிய பேச்சாளர்களில் ஜிண்டாலும் ஒருவர்.
நான்கு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் அவரது உரை முக்கியத்துவம் பெறுகிறது. அன்றைய கூட்டத்தில் அவர் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அன்றைய கூட்டத்தில் ஜான் மெக்கெய்ன் முறைப்படி வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்.
செப்டம்பர் 3ம் தேதி இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் ஜிண்டால் உரை நிகழ்த்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அடுத்து துணை அதிபர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படவுள்ளதால், ஜிண்டால் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications