For Quick Alerts
For Daily Alerts
Just In
டெல்லியில் மீண்டும் குண்டு வெடிப்பு-சிறுவன் பலி, 18 பேர் காயம்

மோட்டார் பைக்கில் வந்த இருவர் எலெக்ட்ரிகல் கடை முன் ஒரு பையை விட்டுச் சென்றனர். அந்தப் பையை 13 வயது சிறுவன் ஒருவன் எடுத்துப் பார்த்தபோது அதில் இருந்த டிபன் பாக்ஸ் குண்டு வெடித்து சிதறியது. இதி்ல் அந்தச் சிறுவன் பலியானான்.
மேலும் 18 பேர் காயமடைந்தனர். இதில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ்களும் தீயணைப்புப் படை வாகனங்களும் விரைந்துள்ளன. இச் சம்பவத்தையடு்த்து டெல்லியில் பல பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டுவிட்டன.
டெல்லியில் கடந்த 13ம் தேதி 5 இடங்களில் குண்டுகள் வெடித்து 30க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது.