அரசு பஸ் ஊழியர்களுக்கு 20% போனஸ் - ரூ. 2000 முன்பணம்
சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸும், ரூ. 2000 முன் பணமும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு, இந்த ஆண்டு தீபாவளிக்கான போனஸ் குறித்த பேச்சுவார்த்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நேற்று நடந்தது.
இதில் 27 போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 57 பேர் கலந்து கொண்டனர். தங்களது கருத்துக்கள், கோரிக்ைககளை தெரிவித்தனர். அரசு சார்பில் போக்குவரத்துத் துறை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ராமசுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அமைச்சர் நேரு போனஸ் குறித்து அறிவித்தார். அதன்படி, 2007-08ம் ஆண்டுக்கான போனஸாக 12 சதவீதம்ம, கருணைத் தொகையாக 8 சதவீதம் ஆக மொத்தம் 20 சதவீதம் மற்றும் ரூ. 2000 முன்பணம் ஆகியவை போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அளிக்கப்படும் என அறிவித்தார்.
அக்டோபர் 15ம் தேதிக்குள் போனஸ் வழங்கப்படும். தொழிலாளர்கள் அதிகபட்சமாக ரூ. 8,4000 போனஸாகப் பெறுவார்கள். போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதலாக ரூ. 90 கோடி நிதிச்சுமை ஏற்படும். 1 லட்சத்து 12 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்அடைவார்கள் என அமைச்சர் தெரிவித்தார்.