'போதை'-டைரக்டரை வெளுத்து வாங்கிய நண்பர்கள்!
மன்னார்குடி: மன்னார்குடி அருகே மது குடித்த போது ஏற்பட்ட போதையில் விடியல் படத்தின் டைரக்டரை அவரது நண்பர்களே அடித்து உதைத்து, வெளுத்து வாங்கிய சம்பவம் நடைபெற்றள்ளது.
மன்னார்குடி அருகே உள்ளது பரவாக்கோட்டை. இந்த ஊரைச் சேர்ந்தவர் பூபேஸ் (30) திரைப்பட இயக்குனராக உள்ளார்.
ஊனமுற்றோரை மையமாக வைத்து தற்போது விடியல் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந் நிலையில் இவரது ஊரில் கபடி போட்டி நடைபெற்றது. போட்டியை காண பூபேஸ், அவரது நண்பர்கள் சுரேஷ், மணிகண்டன் ஆகியோர் முழு போதையில் வந்தனர்.
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இருந்தவர்களுக்கு இடையே திடீரென சண்டை மூண்டது. சுரேஷ்ம், மணிகண்டனும் சேர்ந்து பூபேஸை அடித்து உதைத்தனர். இதில் அவரது தாடை உடைந்து ரத்தம் கொட்டியது.
படுகாயமடைந்த அவர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறி்த்து பரவாக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். சுரேஷ் தப்பியோடிவிட்டார்.