தேர்தலில் யாருடன் கூட்டணி?: ஜி.கே.மணி விளக்கம்
காரைக்குடி: தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து பாமக அறிவிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
காரைக்குடி வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணி குறித்து முடிவெடுக்க அவகாசம் உள்ளது. யாருடன் கூட்டணி என்பது குறித்து கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டி முடிவு எடுத்து தேர்தல் நேரத்தின்போது அறிவிப்போம்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு முதல்வர் கருணாநிதி தீவிர முயற்சி எடுக்க வேண்டும். இதுதொடர்பாக டெல்லி சென்று பிரதமரை சந்தித்துப் பேசி தீர்வுக்கு முயற்சிக்க வேண்டும். இலங்கைத் தமிழர்கள் படுகொலையைத் தடுக்க வேண்டிய பொறுப்பு அனவருக்கும் உள்ளது.
தமிழக பொருளாதார வளர்ச்சிக்கு மின் தடை பெரும் இடையூறாக உள்ளது. எனவே அதை சரி செய்ய வேண்டும்.
மதுரை நகரம் தென் தமிழகத்தின் தலைநகராக விளங்குகிறது. எனவே அங்கு ஏராளமான தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை உருவாக்க வேண்டும் என்றார் அவர்.