நெல்லை ரயில் நிலையத்தில் மோப்ப நாய் பிரிவு தொடக்கம்
நெல்லை: நெல்லை ரயில் நிலையத்தில் தனியாக மோப்ப நாய் பிரிவு செயல்படத் தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்டில் நெல்லை உள்ளது. நெல்லை ரயில் நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மாநகர் முழுவதும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்வே நிர்வாகமும் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்சு நெல்லை ரயில் நிலையத்தில் மோப்ப நாய் பிரிவு தொடங்க ரயில்வே நி்ர்வாகம் அனுமதியளித்தது.
ஜெனரல் - மாயா - தனி வீடு:
ஐந்தரை வயதாகும் மோப்ப நாய் ஜெனரல், 6 மாத மோப்ப நாய் மாயா என இரண்டு நாய்கள் மதுரையிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்காக ரயில்வே குடியிருப்பில் ஒரு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் கண்காணிக்க ரயில்வே பாதுகாப்பு படை உதவி சப்-இன்ஸ்பெக்டர் சுப்பு தலைமையில் போலீசார் செல்லப்பாண்டியன், போஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மோப்ப நாய் பிரிவு இன்று முதல் செயல்படுகிறது.
நெல்லையில் இனிமேல் அனைத்து எக்ஸ்பிரஸிலும் சோதனை நடத்தப்படும். தீவிர சோதனைக்கு பிறகுதான் பயணிகள் அனுமதிக்கப்படுவர்.