இன்று அமெரிக்க தேர்தல்-ஒபாமா Vs மெக்கெய்ன்

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பராக் ஒபாமாவும், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஜான் மெக்கெய்னும் கடைசி கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டனர்.
ஒபாமா சிகாகோவிலும் மெக்கெயின் அரிசோனாவிலும் தங்களது கடைசி பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
கிட்டத்தட்ட 21 மாதங்களாக நடந்து வந்த தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்து இன்று வாக்குப் பதிவு நடக்கிறது. வாக்குப் பதிவு முடிந்தவுடனேயே வாக்கு எண்ணிக்கை துவங்கிவிடும்.
இந்திய நேரப்படி நாளை மாலை 5 மணி முதல் முடிவுகள் வெளியாகத் துவங்கிவிடும்.
அமெரிக்க தேர்தல் முறை:
ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒரு குறிப்பிட்ட புள்ளிகள் (Electoral College) உண்டு. அதிக மாகாணங்களில் வென்று அதிக புள்ளிகளை வெல்பவரே அதிபராவார்.
நாட்டிலேயே மிகப் பெரிய மாகாணமான கலிபோர்னியாவில் வென்றால் 55 புள்ளிகள் கிடைக்கும். மிகச் சிறிய மாகாணமான கொலம்பியாவில் வென்றால் 3 புள்ளிகள் தான் கிடைக்கும்.
இதனால் யார் அதிகபட்சமான பெரிய மாகாணங்களில் வெல்கிறார்களோ அவர்களுக்கே வெற்றி சாத்தியமாகும்.
மொத்தம் எல்லா மாகாணங்களையும் சேர்த்து 538 புள்ளிகள் உள்ளன. அதிபராக குறைந்தபட்சம் 270 புள்ளிகளை வெல்ல வேண்டும்.
அமெரிக்காவின் இந்த ஓட்டுமுறையால் நாடு முழுவதும் அதிகமான வாக்குகளைப் பெற்றவர் தான் அதிபராக முடியும் என்ற நிலை இல்லை. அங்கே புள்ளிக் கணக்கே முக்கியமாகும்.
உதாரணத்துக்கு, 2000ம் ஆண்டு தேர்தலில் ஜார்ஜ் புஷ் நாடு முழுவதும் வாங்கிய ஓட்டு 47.87%. அவரை எதிர்த்து நின்ற அல் கோர் வாங்கி ஓட்டு 48.38%. ஆனால், புஷ் வென்ற புள்ளிகள் (Electoral College votes) 271. கோர் வென்றது 266 தான்.
ஒரு கட்டத்தில் இருவரும் சரி சம நிலையில் இருக்க புளேரிடாவில் கிடைத்த வெற்றியால் 25 புள்ளிகளை வென்ற புஷ் ஆட்சியைப் பிடித்தார். அந்த மாநிலத்தில் இருவருக்கும் இடையே நிலவிய ஓட்டு வித்தியாசம் வெறும் 537 ஓட்டுக்கள் தான்.
இந்தப் புள்ளிக் கணக்கை அமெரிக்கா கையாளக் காரணம், எல்லா மாகாணத்துக்கும் சமமான நிர்ணய பலம் கிடைப்பது தான். மாகாணத்தின் மக்கள் தொகையையும் பிற விஷயங்களையும் கணக்கில் வைத்த இந்த புள்ளிகள் நிர்ணயிக்கப்படுவதால், மாகாணங்களின் ஓட்டுக்கு உரிய பலமும் மரியாதையும் கிடைக்கிறது.
உதாரணத்துக்கு கலிபோர்னியாவின் மக்கல் தொகை அமெரிக்க மக்கள் தொகையில் 12.03 சதவீதம். ஆனால், அந்த மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்டு்ள்ள புள்ளிகள் 55 தான். இது மொத்த புள்ளிகளில் 10.22% சதவீதம் தான்.
அதே நேரத்தில் மிகச் சிறிய மக்கள் தொகை கொண்ட (அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 0.18%) வியோமிங் மாகாணத்திற்கு தரப்படும் புள்ளிகள் 3. இது மொத்த புள்ளிகளில் 0.56% ஆகும்.
இந்த புள்ளிகளின் எண்ணிக்கையை வைத்துத் தான் அமெரிக்க நாடாளுமன்றம் (House of Representatives), செனட் சபை ஆகியவற்றுக்கு எம்பிக்கள் நியமிக்கப்படுகின்றனர். இதனால் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் மாகாணத்துக்கு உரிய பலம் (புள்ளிகள்) கிடைக்க இந்த தேர்தல் முறை வழி வகுக்கிறது.
இதனால் தான் பெரும் குழப்பமாக இருந்தாலும் இந்த முறையையே அமெரிக்கா கையாளுகிறது.
ஹாம்சையரில் ஒபாமாவுக்கு வெற்றி:
இதற்கிடையே ஹாம்ப்சையர் மாகாணத்தில் டிக்ஸ்வி்ல்லே நாட்ச் பகுதியில் பதிவான 21 வாக்குகளில் 15ல் ஒபாமா வென்று முதல் வெற்றியை பதிவு செய்துவிட்டார்.
நாடு முழுவதும் ஓட்டெடுப்பு இன்று மாலை தான் நடக்கிறது என்றாலும் சில மாகாணங்களில் சில பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகவே வாக்கெடுப்பு நடப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஒபாமாவுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.
ஒபாமா பாட்டி மரணம்:
இந்நிலையில் ஒபாமாவின் பாட்டி மேடலின் பெய்ன் டன்ஹம் வடக்கு கரோலினாவில் உள்ள சார்லட் என்ற இடத்தில் மரணமடைந்தார். பிரச்சாரத்திலிருந்த ஒபாமா இத்தகவலைத் தெரிவித்தார். ஒபாமாவை வளர்த்தவர் அவரது பாட்டிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications