ஓபாமாவின் 'டாப்' குழுவில் 2 இந்தியப் பெண்கள்
சிறந்த பொருளாதார நிபுணர் சோனால் ஷா என்பது குறிப்பிடத்தக்கது.
ஓபாமா நியமித்துள்ள ஆலோசனைக் குழுவில் 40 வயதாகும் சோனால் ஷாவும் இடம் பெற்றுள்ளார். இந்தக் குழு, வெள்ளை மாளிகையில், ஓபாமாவின் புதிய குழுவைத் தேர்வு செய்வதில் ஓபாமாவுக்கு உதவும்.
2003ம் ஆண்டு பெர்சன் ஆப் தி இயர் என்ற விருதைப் பெற்றவர் சோனால் ஷா. தற்போது கூகுள் நிறுவனத்தில், அந்த நிறுவனத்தின் குளோபல் வளர்ச்சிக் குழுவில் இடம் பெற்றுள்ளார்.
கூகுள் நிறுவனத்துடன் கைகோர்க்கும் முன் கோல்ட்மேன், சாக்ஸ் அன்ட் கோ ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிவர் சோனால் ஷா.
மேலும், அமெரிக்க வளர்ச்சி மையத்தின், தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார கொள்கைக்கான உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
அமெரிக்க கருவூலத் துறையிலும் அவர் எட்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த இன்டிகார்ப்ஸ் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் இருக்கிறார் ஷா.
70களில் ஷாவின் தந்தை குஜராத்திலிருந்து நியூயார்க்குக்கு இடம் பெயர்ந்தார். சோனால் ஷாவும், அவரது சகோதரியும், 1972ம் ஆண்டு நியூயார்க் வந்து சேர்ந்தனர். சோனால் ஷாவுக்கு ஒரு சகோதரரும் இருக்கிறார்.
இந்தக் குழுவில் பல்வேறு தனியார்கள், தனியார் நிறுவன நிபுணர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொருவரும் தத்தமது துறையில் சிறந்தவர்களை, தேர்வு செய்து அவர்களை ஓபாமாவுக்குப் பரிந்துரைப்பார்கள்.
சொலிசிட்டர் ஜெனரலாக பிரீத்தா பன்சால்:
இதற்கிடையே மற்றொரு இந்தியரான பிரீத்தா பன்சால், வெள்ளை மாளிகையின் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்படக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹார்வர்டைச் சேர்ந்த வழக்கறிஞரான பிரீத்தா பன்சால், ஓபாமாவின் தேர்தல் பிரசாரக் குழுவில் முக்கியப் பங்கு வகித்தவர். பிரீத்தா, வெள்ளை மாளிகை வக்கீலாக நியமிக்கப்பட்டால், அந்தப் பதவிக்கு வரும் முதல் பெண் என்ற பெருமையைப் பெறுவார்.
1993ம் ஆண்டு முதல் 96 வரை கிளிண்டன் அதிபராக இருந்தகாலத்தில், வெள்ளை மாளிகை நீதித்துறையில் பணியாற்றினார் பன்சால்.
அமெரிக்க சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையத்தின் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இப்பதவியை வகித்த முதல் இந்திய-அமெரிக்கர் பன்சால் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!













Click it and Unblock the Notifications