பிரிட்டிஷ் டெலிகாமில் 10000 பேர் நீக்கம்!
Subscribe to Oneindia Tamil

இந்நிறுவனத்தில் மொத்தம் 1 லட்சத்து 60 ஆயிரம் நேரடி மற்றும் மறைமுக பணியாளர்கள் உள்ளனர். நீக்கப்பட்டுள்ளவர்களில் நிறுவன ஊழியர்கள், உயரதிகாரிகள், ஏஜென்ஸிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் என அனைத்துப் பிரிவினரும் அடக்கம்.
அதே நேரத்தில் இந்த நிறுவனத்தின் இந்தியக் கிளையில் பணியாற்றும் 600 பேருக்கு பாதிப்பு இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் வருவாய் பெருமளவு குறைந்துவிட்டதாலேயே இந்த அதிரடி நடவடிக்கை. ஒரு விதத்தில் ஐரோப்பிய பொருளாதார சரிவின் குறியீடாகவே இந்த நடவடிக்கையைப் பார்க்கின்றனர் வல்லுநர்கள்.
அடுத்தகட்டமாக மேலும் 4 சதவிகித பணியாளர்கள் குறைக்கப்படுவார்கள் என்றும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால் பிரிட்டிஷ் டெலிகாமுக்காக சாப்ட்வேர் உற்பத்தி செய்யும் இந்திய ஐடி நிறுவனங்களுக்கும் பாதிப்பு இருக்கும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications