For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ம.பி. முதல்வரின் இணையதளம் 'மூடல்'

By Staff
Google Oneindia Tamil News

போபால்: தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச முதல்வரும், பாஜக தலைவருமான சிவராஜ் சிங் செளகான் தொடங்கிய இணையதளம் மூடப்பட்டு விட்டது.

மத்தியப் பிரதேச முதல்வர் செளகான் கடந்த 22ம் தேதி பாஜக அலுவலகத்தில் வைத்து http://www.shivrajsinghchouhan.in/ என்ற தனது இணையதளத்தை தொடங்கி வைத்தார். ம.பி. மாநில பாஜக பொறுப்பாளரான அனந்தகுமார் முன்னிலையி்ல கோலாகலமாக விழா நடந்தது.

அதில், தேசியக் கொடி இடம் பெற்றிருந்தது. தேசியக் கொடியை அரசியல் கட்சிகள் தஙகளது இணையதளங்களில் பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்திருப்பதால் இதுகுறித்து விளக்கி, மாவட்ட ஆட்சித் தலைவரும், தேர்தல் அதிகாரியுமான மனீஷ் ரஸ்தோகி, செளகானுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இதையடுத்து உடனடியாக அந்த இணையதளத்தை பாஜக முடக்கி வைத்து விட்டது. தற்போது இணையதளத்திற்குப் போனால் 'பேஜ் நாட் பவுன்ட்' என வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X