7 மாத கர்ப்பிணி காதலிக்கு தாலி கட்டிய காதலன்!
விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஏழு மாத கர்ப்பிணி காதலிக்கு அவரது காதலன் தாலி கட்டினார்.
விழுப்புரம் அருகே உள்ளது பள்ளியந்தூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் கோவிந்தன் (27). அதே பகுதியைச் சேர்ந்தவர் மதுரை என்பவரின் மகள் ரஞ்சிதா
(20).
இவர்கள் இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இதனால் ரஞ்சிதா கர்ப்பமானார்.
தான் கர்ப்பமாக இருப்பது வெளியே தெரிந்தால் அவமானம் என்றும் அதனால் தன்னை உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவரது காதலன் கோவிந்தனை வற்புறுத்தியுள்ளார். ஆனால் இதற்கு கோவிந்தனும் அவரது பெற்றோர்களும் மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில் பள்ளியந்தூர் கிராம பிரமுகர்களுடன் முன்பு விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அனந்தபுரம் சிவன் கோவிலில் பிப்ரவரி 1 -ம் தேதி ரஞ்சிதாவை கோவிந்தன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ரஞ்சிதா குடும்பத்தினர் அனந்தபுரம் சிவன் கோவிலுக்கு சென்றனர். ஆனால் கோவிந்தன் குடும்பத்தினர் அங்கு வரவில்லை. மாறாக தலைமறைவாகிவிட்டனர்.
இதுகுறித்து ரஞ்சிதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோயிலில் ஊராட்சி மன்ற தலைவரர் பள்ளியந்தூர் தேவராசு, குப்பம் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் கோவிந்தனுக்கும் 7 மாத கர்ப்பிணி ரஞ்சிதாவுக்கும் திருமணம் நடைபெற்றது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications