For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு: தென் சென்னை- இல.கணேசன், வட சென்னை-தமிழிசை, ராமநாதபுரம்-திருநாவுக்கரசர்

By Staff
Google Oneindia Tamil News

Thirunavukkarasar and L.Ganesan
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜக போட்டியிடும் 12 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் தென் சென்னையில் போட்டியிடுகிறார். வட சென்னையில் கட்சி பொதுச் செயலாளர் தமிழிசை செளந்தரராஜன் நிற்கிறார். ராமநாதபுரத்தில் திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார்.

சமத்துவ மக்கள் கட்சி, கார்த்திக் கட்சி உள்ளிட்டோருடன் பாஜக பேசி வந்தது. இதில் சரத்குமாருடன் உறவு ஏற்படுவது போல தெரிந்தது. ஆனால் கடைசி நேரத்தி்ல் குழப்பமாகி இப்போது பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. இருப்பினும் கார்த்திக் கட்சி உள்ளிட்ட சில குட்டிக் கட்சிகள் பாஜகவு ஆதரவு தெரிவித்துள்ளதாக இல.கணேசன் நேற்று தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் 11 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் போட்டியிடுவதாகவும் அறிவித்தார்.

இந்த நிலையில் கட்சியின் சார்பில் போட்டியிடும் 12 வேட்பாளர்களையும் பாஜக மேலிடம் நேற்று அறிவித்தது.

வேட்பாளர்கள் விவரம்...

தென் சென்னை- இல.கணேசன் - மாநில தலைவர்.

ராமநாதபுரம்- திருநாவுக்கரசர் -தேசிய செயலாளர்.

கன்னியாகுமரி- பொன்.ராதாகிருஷ்ணன் - மாநில துணை தலைவர்.

வட சென்னை- தமிழிசை சவுந்தரராஜன் -மாநில பொதுச் செயலாளர்.

திருச்சி - லலிதா குமாரமங்கலம் - தேசிய செயற்குழு உறுப்பினர்.

வேலூர் - கே.ராஜேந்திரன் - மாநில செயலாளர்.

கோவை - ஜி.கே.எஸ்.செல்வகுமார் -மாநில செயலாளர்.

கிருஷ்ணகிரி- ஜி.பாலகிருஷ்ணன் - மாவட்ட பொதுச் செயலாளர்.

ஈரோடு - என்.பழனிசாமி - தேசிய கவுன்சில் உறுப்பினர்.

நீலகிரி(தனி) - குருமூர்த்தி - இளைஞர் அணி மாவட்ட தலைவர்

பொள்ளாச்சி - வி.எஸ்.ரமேஷ் - மாநில செயற்குழு உறுப்பினர்.

புதுச்சேரி - விஸ்வேஸ்வரன் - புதுவை மாநில தலைவர்.

திமுக, அதிமுகவை நான்கு தொகுதிகளில் நேரடியாக சந்திக்கிறது பாஜக. அவை - தென் சென்னை, ராமநாதபுரம், பொள்ளாச்சி மற்றும் கிருஷ்ணகிரி ஆகும்.

வட சென்னையில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், கன்னியாகுமரியில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை எதிர்க்கிறது.

திருச்சியில் காங்கிரஸ், அதிமுக, வேலூரில் அதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கோவையில் காங்கிரஸ், சிபிஎம், ஈரோட்டில் மதிமுக, காங்கிரஸ், நீலகிரியில் திமுக, மதிமுக, புதுவையில் பாமக, காங்கிரஸ் ஆகியவற்றை எதிர்த்து மோதுகிறது.

அதேசமயம், தங்களது கூட்டணியில் இழுக்க கடுமையாக முயன்றும் முடியாமல் போன தேமுதிகவை போட்டியிடும் 12 தொகுதிகளிலும் பாஜக எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2 பெண்களுக்கு வாய்ப்பு

திமுக, அதிமுகவைப் போல பாஜகவிலும் இரண்டு பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் யாருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை.

சி.பி்க்கு கணேசன் 'ஆப்பு':

முன்னாள் எம்.பியான சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை சீட்டுக்காக கடுமையாக முயன்றார். ஆனால், இல.கணேசன் தரப்பு அதைத் தடுத்துவிட்டது. இருவருக்கும் எப்போதுமே ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே ஒரு தனித் தொகுதியில்...:

12 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக, தலித்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் ஒரே ஒரு தனித் தொகுதியில் மட்டுமே போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்வானி பிரதமர்-சுகாதார அமைச்சர் தமிழிசை....!:

சென்னை வண்ணாரப்பேட்டையில் வட சென்னை வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜனுக்காக தேர்தல் அலுவலகத்தை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து இல.கணேசன் பேசுகையில்,

தேர்தலுக்குப் பின் அதிமுக பாஜகவைத் தான் ஆதரிக்கும். அடுத்த பிரதமர் அத்வானி, அடுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தமிழசை சௌந்தரராஜன் தான் என்றார்.

தமிழிசையின் ரிங்டோன்...:

வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் தமிழிசை தனது செல்போனின் ரிங்டோனை மாற்றிவிட்டார். இப்போது அவரது ரிங்டோன்.. "வெற்றி நிச்சயம்.. இது வேத சத்தியம்'' பாட்டு தான்.

இவர் மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X