For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இஸ்ரோ விஞ்ஞானியாக விரும்பும் மாணவி பூமிகா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பிளஸ் 2 தேர்வில் 1190 மதிப்பெண்கள் எடுத்த சென்னை மாணவி பூமிகா இஸ்ரோ விஞ்ஞானி ஆவதே தனது லட்சியம் என கூறியுள்ளார்.

தமிழகத்தில் மாணவர்கள் தமிழ் மொழியில் ஆர்வம் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு தமிழை முதல் பாடமாக எடுத்து படிக்கும் மாணவர்களில் யார் அதிக மதிப்பெண்கள் பெறுகிறார்களோ அவர்கள் தான் மாநிலத்தில் முதல் இடம் பிடிப்பார்கள் என அறிவித்துள்ளது.

மற்ற மொழி பாடங்களை எடுத்தவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் அவர்கள் மாநில அளவில் முதல் ரேங்க் என்ற பெருமையை கைப்பற்ற முடியாது.

இந்த வரிசையில் தமிழை பாடமாக எடுக்காமல் சமஸ்கிருதத்தை தேர்வு செய்த பூமிகா என்ற சென்னை சூளைமேடு டி.ஏ.வி.மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவியும் 1190 மதிப்பெண்கள் எடுத்து போதும் அவருக்கு முதலிடம் கிடைக்கவில்லை.

அவர் சமஸ்கிருதத்தில் 198, ஆங்கிலத்தில் 193, இயற்பியல் 199, வேதியியல், கம்ப்யூட்டர் சயின்சில் மற்றும் கணித பாடத்தில் தலா 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவருடைய பெற்றோர் டி.எஸ்.வேணுகோபால் மற்றும் பத்மஸ்ரீ இருவரும் வங்கியில் அதிகாரிகளாக பணிபுரிகின்றனர்.

இந்நிலையில் அவர் தனது எதிர்கால லட்சியம் குறித்து கூறுகையில்,

பிளஸ் 2 தேர்வில் நான் சாதிப்பதற்கு எனது பெற்றோர்களும், பள்ளி முதல்வரும், ஆசிரியர்களும் தான் காரணம். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

படிப்பதற்கு எவ்வளவு நேரம் செலவளித்தோம் என்பது முக்கியமல்ல. படிக்கும் நேரத்தி்ல மனதை ஒரு நிலைப்படுத்தி படிக்க வேண்டும். நான் அப்படி தான செய்தேன்.

அண்ணா பல்கலைக்கழத்தில் பி.இ., ஏரோனாடிக்கல் என்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். பின்னர் இஸ்ரோவில் இணைந்து விஞ்ஞானியாக ஆசை. இது தான் என் லட்சியம் என்றார் பூமிகா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X