For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரி்க்க அணு ஆயுத ரகசியங்கள் 'லீக்'

By Staff
Google Oneindia Tamil News

Nuclear Warhead
வாஷிங்டன்: அமெரிக்க அணு ஆயுதங்கள், ராணுவ அணு உலைகள், உலைகளுக்கான எரிபொருள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் ஆகியவை குறித்த டாப் சீக்ரெட் ஆவணங்கள், வரைபடங்கள் ஆகியவை அமெரிக்க அரசின் இணையத் தளத்தில் தவறுதலாக வெளியாகிவிட்டன.

அமெரிக்க அரசின் அச்சகத்துறையின் அதிகாரப்பூர்வ இணையத் தளத்தில் இவை வெளியான 24 மணி நேரத்துக்குப் பிறகே அது குறித்து அரசுக்குத் தெரியவந்தது. இதையடுத்து அந்த விவரங்கள் இணையத்திலிருந்து நீக்கப்பட்டன.

இந்த இணையத் தளம் திங்கள்கிழமை இந்த விவரங்களை வெளியிட்டது. இதைப் பார்த்து அதிர்ந்துபோன அமெரிக்க பாதுகாப்பு அமைப்பின் ஆய்வாளரான ஸ்டீவன் ஆப்டர்குட் இது குறி்த்து தனது அமைப்பின் (Secrecy News) நியூஸ்லெட்டரில் பலருக்கும் தகவலை அனுப்பிவிட்டார்.

இந்த நியூஸ்லெட்டரைப் பார்த்து விவரம் அறிந்த நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் நிருபர், இது குறித்து அச்சகத்துறையிடம் கேள்வி எழுப்பினார்.

அப்போது தான் நடந்த தவறே அவர்களுக்குத் தெரியவந்தது. உடனடியாக இணையத் தளத்தை முடக்கிய அவர்கள், அந்த விவரங்கள் அடங்கிய பக்கங்களை நீக்கினர்.

இது குறித்து சிஐஏவின் முன்னாள் இயக்குனரான ஜான் டியூச் கூறுகையில், தவறுகள் நடப்பது சகஜம் தான். ஆனால், பிரமாண்டமான தவறுகள் நடப்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. இருந்தாலும் இந்த விவரங்கள் வெளியானதால் அமெரிக்க பாதுகாப்புக்கு பெரிய தீ்ங்கு ஏதும் வந்துவிடாது என்றார்.

ஆனால் அணு ஆயுதப் பரவலை கண்காணிக்கும் அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவரான டேவிட் ஆல்பிரைட் கூறுகையில், நடந்தது மிகப் பெரிய தவறு. அணு உலைகள், அணு ஆயுதங்களுக்கான எரிபொருள் எங்கு வைக்கப்பட்டுள்ளது என்ற விவரம் சாதாராணமானதல்ல. தீவிரவாதிகள் கைக்கு இந்த விவரம் கிடைத்தால் என்ன ஆகும்? என்றார்.

சர்வதேச அணு சக்தி மையத்திடம் வழங்கப்படுவதற்காக உருவாக்கப்பட்ட ரகசிய ஆவணமாம் இது. அதை
அதிபர் ஒபாமா பார்த்துவிட்டு கடந்த மே மாதம் 5ம் தேதி ஓ.கே. செய்துள்ளார்.

இதையடுத்து அதை பதிப்பு செய்வதற்காக அச்சகத்துறையிடம் அமெரிக்க அணு சக்தித் துறை தந்துள்ளது. அதைத் தான் அப்படியே 'நெட்டில்' ஏற்றிவிட்டனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து அச்சகத்துறையின் செய்தித் தொடர்பாளர் கேரி சோமர்செட் கூறுகையில், எங்களிடம் வரும் ஆவணங்களை இணையத்தில் போடுவது வழக்கம். அந்த அடிப்படையில் தான் இதையும் வெளியிட்டோம் என்றார் கூலாக.

இது அதிகாரப்பூர்வமாக ரகசிய ஆவணமாக அங்கீகரிக்கப்படாவிட்டாலும் பெரும் ரகசியங்கள் அடங்கிய ஆவணம் தான் என்பதால், இது ஏன் வெளியானது என்ற விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X