குறைந்த கட்டண சேவையில் இறங்கும் ஏர் இந்தியா!
டெல்லி: பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனம் விரைவில் உள்நாட்டில் குறைந்த கட்டணத்தில் விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
ஊழியர் சம்பளப் பிரச்சினை, தொடர் நஷ்டம், கடன் நெருக்கடி என பல சிக்கல்களில் தவிக்கும் ஏர் இந்தியா, கடந்த ஜூன் மாதம் தரவேண்டிய சம்பளத்தை இன்னும் ஊழியர்களுக்கு வழங்கவில்லை. நிர்வாகத்தின் கையில் பணமில்லை என்று இதற்கு அர்த்தமில்லை. ஏர் இந்தியாவின் நிலைமை மோசமாக உள்ளது என்பதை ஊழியர்களுக்கு உணர்த்தவே இந்தமாதிரி செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நிறுவனத்தைக் காப்பாற்ற மேலும் ஒரு முயற்சியாக உள்நாட்டு சேவையில் குறைந்த கட்டண விமானங்களை அறிமுகப்படுத்த ஏர் இந்தியா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ரக விமானங்களை பயன்படுத்தப் போகிறார்களாம்.