For Daily Alerts
Just In
நெல்லை பெண் போலீசுக்கு பன்றி காய்ச்சல்?
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரது பெயர் சுசிலா மேரி. பாளையங்கோட்டை ஆயுதப்படை பிரிவில் பெண் போலீசாக வேலை பார்த்து வருகிறார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி சேர்ந்தவர். இவரது தந்தையின் பெயர் அந்தோணி.
இவருக்கு கடந்த சில தினங்களாக இவருக்கு சளி காய்ச்சல் இருந்து வந்தது. இதையடுத்து அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு பன்றி காய்ச்சல் உள்ளதா என சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவரது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே காவலர் விடுதியில் பலருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.