For Daily Alerts
Just In
இந்தியாவை முக்கிய எதிரியாக நினைக்கும் சீனர்கள்- செய்தி

இதுதொடர்பாக அந்த இதழில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தியில், இந்தியாவை சீனர்கள் இன்னும் முக்கிய எதிரியாக கருதுகிறார்கள். சீன மீடியாக்களுக்கு வெளிப்படையான விவாதங்களுக்கு அரசுத் தடை உள்ளது. ஆனால் இந்தியாவுடன் மீண்டும் போர் மூண்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து இன்டர்நெட் மூலம் சீனர்கள் சுதந்திரமாக விவாதிக்கிறார்கள். இதை அரசு தடுக்காமல் உள்ளது என்றார்.
இதற்கிடையே, ஓய்வு பெற்ற சீன அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், சீன ராணுவத்தினர் அர்ப்பணிப்பு உணர்வுடன் இல்லை.
1962ம் ஆண்டு சீனா, இந்தியாவுடன் போரிட்டபோது இருந்ததை விட மிகவும் வலிமையுடன் தற்போது உள்ளது. நமது ஆயுத பலமும் பல மடங்கு மேம்பட்டுள்ளது. ஆனால் ராணுவம் தேசபக்தியுடன் இல்லை. போரிட அவர்கள் தயங்குகிறார்கள் என்று கூறியுள்ளார்.