இந்திய விற்பனை- ரூ. 4500 கோடியாக உயர்த்த பானாசோனிக் இலக்கு
டெல்லி: இந்தியாவில் தனது விற்பனை அளவை இரட்டிப்பாக்க அதாவது ரூ. 4500 கோடியாக உயர்த்த ஜப்பானைச் சேர்ந்த பானாசோனிக் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும், 2014ம் ஆண்டுக்குள், இந்தியாவிலிருந்து உலகளாவிய வர்த்தகத்தின் பங்கை 10சதவீதம் அதிகரிக்கவும் அது திட்டமிட்டுள்ளது.
உள்ளூர் தயாரிப்பிலும், ஆய்வு மையம் ஒன்றை இந்தியாவில் தொடங்குவதிலும் தற்போது பானாசோனிக் நிறுவனம் மும்முரமாக உள்ளது. உலக அளவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகிலேயே 3வது பெரிய சந்தையாக இந்தியா மாறும் என்றும் கூறியுள்ளது பானாசோனிக்.
இதுகுறித்து பானாசோனிக் இந்திய தலைமை செயல் அதிகாரி டாய்ஸோ இடோ கூறுகையில், இந்தியாவிலிருந்து எங்களது வர்த்தகத்திற்கு கிடைக்கும் பங்கு தற்போது ஒரு சதவீதமாக மட்டுமே உள்ளது. ஆனால் இந்திய வர்த்தக சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே இந்தியாவின் பங்கு வரும் காலத்தில் மிகப் பெரிதாக உயரும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் பங்கு 10 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.