கேபியை விசாரிக்க இப்போதைக்கு இந்தியாவுக்கு அனுமதி இல்லை - இலங்கை

இதுகுறித்து சன்டே டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி கைது செய்யப்பட்டார் கேபி. அவரிடம் இலங்கை அதிகாரிகள் இன்னும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணைகள் முடிவடைந்து, சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னரே இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் அவரை விசாரிக்க அனுமதிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு கேபிதான் பணப் பட்டுவாடா செய்தார் மற்றும் ஆயுதங்களை வாங்கி அளித்தார் என்று இந்தியா கருதுகிறது. இது தொடர்பாக கேபியிடம் விசாரணை நடத்தினால் பல முக்கியத் தகவல்கள் கிடைக்கும் என்றும் அது நம்புகிறது.
கேபியை விசாரிக்க ஏற்கனவே இலங்கையிடம் அனுமதி கோரியுள்ளது இந்தியா. கேபியை விசாரிக்க சிபிஐ குழுவும் கூட தயார் நிலையில் இருப்பதாக தெரிகிறது.
ஆனால் கேபியை இப்போதைக்கு யாரிடமும் காட்டுவதில்லை என்ற முடிவில் இலங்கை இருப்பதாக தெரிகிறது.