சொத்து விபரம் வெளியிட்ட முதல் கலெக்டர் சகாயம்!

Subscribe to Oneindia Tamil

Collector Sahayam
நாமக்கல்: தனது சொத்து விவர பட்டியலை நாமக்கல் மாவட்ட கலெக்டர் சகாயம் வெளியிட்டு பலரது புருவத்தையும் உயர வைத்துள்ளார்.

பொது வாழ்வில் இருப்போர் தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என்ற அடிப்படையில் சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே கூட தங்களது சொத்து பட்டியல் விவரத்தை வெளியிட்டனர்.

அவர்களது தொடர்ந்து உத்தரபிரதேச மாநில ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கத்தில், ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ். அதிகாரிகள் தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து, உத்திர பிரதேச மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயசங்கர் பாண்டே, மத்திய அரசின் கூடுதல் கேபினட் செயலாளர்களாக இருக்கும் சுனில்குமார், அவரது மனைவி ரேணுகா, டி.ஐ.ஜி. ஜஸ்பீர் சிங் ஆகியோர் சொத்து விபரப்பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலைலிய்ல, நாமக்கல் மாவட்ட கலெக்டர் சகாயம் அவரது சொத்து விபரங்களை தேசிய தகவல் மையத்தில் வெளியிட்டுள்ளார்.

அவரது சொத்து விவரம்...

மதுரை மாவட்டம், மதுரை தாலுகா ஆரப்பாளையம் கிராமத்தில் 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு உள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் ரூ. 7,172 உள்ளது. மேலும், எல்.ஐ.சியில் கடன் உள்ளது. அந்த கடனை செலுத்தி வருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் சகாயம்.

இதன்மூலம் சகாயம், தமிழகத்தில் தனது சொத்து விபரப் பட்டியலை வெளியிட்ட முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்ற பெருமையை பெறுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+