திருச்செந்தூரில் மு.க. ஸ்டாலின் இன்று பிரச்சாரம்
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்: இடைத் தேர்தல் நடைபெறும் திருச்செந்தூர் கொகுதியில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தீவிர பிரச்சாரம் மேற்கொள்கின்றார்.
திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 19- ம் தேதி நடைபெறுகிறது. இதில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியிடுகின்றார்.
அவரை ஆதரித்து துணை முதல்வரும், திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின் தனது 2 நாள் பிரச்சாரத்தை இன்று மாலை தொடங்குகிறார்.
மாலை 4 மணிக்கு வடக்கு ஆத்தூரில் பிரசாரத்தை தொடங்கும் அவர் தொடர்ந்து சேர்ந்தபூமங்கலம், புன்னக் காயல், தெற்கு ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டனம், திருச்செந்தூர், அமலி நகர் ஆகிய இடங்களில் தீவிர வாக்கு சேகரிக்கின்றார்.












Click it and Unblock the Notifications