வோக்ஸ்வேகனின் முதல் இந்தியத் தயாரிப்பு 'போலோ' அறிமுகம்!
Subscribe to Oneindia Tamil
பூனா: ஜெர்மனியின் புகழ்பெற்ற வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் முதல் இந்தியத் தயாரிப்பான போலோ கார் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
மகாராஷ்ட்ர முதல்வர் அசோக் சவாண் இந்தக் காரை அறிமுகம் செய்து வைத்தார்.
பூனாவில் ரூ 3800 கோடியில் அமைந்துள்ள வோக்ஸ்வேகன் ஆலையில் இந்தக் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு 110000 கார்கள் தயாரிக்கும் திறன் கொண்டது இந்த ஆலை.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரவேற்பதாகவும், அதே நேரம் பின்தங்கிய பகுதிகளில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் விதத்தில் விதர்பா, கொங்கன், மராத்வாடா பகுதிகளில் இந்த முதலீடுகள் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் விழாவில் பேசிய முதல்வர் அசோக் சவாண் கூறினார்.
இந்தியாவில் வோக்ஸ்வேகன் செய்துள்ள அதிகபட்ச முதலீடு இந்த நிறுவனத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications